டவுன் பிளானிங் நகர், 2வது குறுக்கு தெரு, பெருமாள்மலை சாலை, நரசோத்திப்பட்டி, சேலம் – 636004 tamilarcouncil@gmail.com
|
தமிழ் | English

சேவைகள்

அரசியல் பழகு

அரசியல் பழகு

50 ஆண்டுகளுக்கு முன்னர் நடுத்தர மற்றும் கீழ்நிலை மனிதர்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அல்லலுற்றனர். அதற்கு காரணம் படிப்பறிவு இல்லாமைதான் என்றனர்.

தற்போதைய காலகட்டத்திலும் மக்கள் ஏதாவது ஒரு வகையில் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போதையசூழலிலோ கல்வியறிவு பெற்றோரின் சதவிகிதம் அதிகம். குறிப்பாகசொல்லப்போனால் அனைவரும் கல்வியறிவு பெற்றுள்ளார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

இருப்பினும் துன்பமும் துயரும் குறைந்தபாடில்லை. அதற்குமுழுமுதற் காரணம் அரசியல் பழகாததுதான். அரசியல்தெளிவும், அரசியல்விழிப்புணர்வும் இல்லாததுதான்.

அரசியல் தெளிவு என்பது என்ன?

நமது குடிமையியல் பற்றி, நாம்வாழும் சூழல் பற்றிய முழுமையான அறிவும் புரிதலும் இல்லாமல் நமக்கு உண்ண உணவும், இருக்கஇடமும் உடுக்க உடையும் இருந்தால்போதும் என்ற கற்பிதத்திலேயே வாழப் பழகிவிட்டோம்.

உண்மையில் நமது வாழ்க்கை முறையில் உள்ள அரசியல், நிதிசுதந்திரத்தில் உள்ள அரசியல், நமதுசமூகத்தின்பால் கொண்டுள்ள அக்கறையில் உள்ள அரசியல், நாம்பெற்ற அடிப்படை உரிமைகள் அனைவருக்கும் கிடைத்ததா என்பதில் உள்ள அரசியல், 

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்இன்பமே எந்நாளுந் துன்ப மில்லைதாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான- என்றதிருநாவுக்கரசரின் வரிகளிலுள்ள ஆன்மிகம் தவிர்த்து மக்கள் நல வாழ்விற்கான அரசியலறிவைப் பெறவேண்டும் என்பதே நமது இயக்கத்தின் நோக்கமாகும்.

அதற்கான களத்தையும் அதில் களமாட வேண்டிய அடிப்படை உரிமைகள் மற்றும் விசயங்களையும் முறையாகப் பயிற்றுவித்து  அரசியல் முதிர்ச்சி பெற்ற தமிழக மக்களை உருவாக்கி அதன்மூலம் வளமான தமிழகத்தை உருவாக்கவேண்டும் என்பதே நமது தலையாயப் பணி.

 

சேவைகள்