டவுன் பிளானிங் நகர், 2வது குறுக்கு தெரு, பெருமாள்மலை சாலை, நரசோத்திப்பட்டி, சேலம் – 636004 tamilarcouncil@gmail.com
|
தமிழ் | English
fashion-slideshow

அனைத்து தமிழர் வளர்ச்சி பேரவை

தமிழர் சமூக முன்னேற்றத்தின் புதிய பாதை
fashion-slideshow

தமிழர் வளர்ச்சி பேரவை

மக்கள் முன்னேற்றத்திற்கான
சமூக இயக்கம்
fashion-slideshow

தமிழர் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு

சமூக நலனுக்காக
இணைந்து செயல்படுகிறோம்
fashion-slideshow

வளமான தமிழர் சமூகம்

கல்வி • முன்னேற்றம் •
சமத்துவம்
fashion-slideshow

சமூக மாற்றத்தின் புதிய பாதை

மக்களுடன் இணைந்து
வளர்ச்சிக்காக

அனைத்து தமிழர் வளர்ச்சி பேரவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

Flywheel Fleet Technologies

தமிழர் வளர்ச்சி பேரவை என்பது தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட மக்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ஒரு சமூகநல வளர்ச்சிப் பேரவை ஒரு சமூக நல அமைப்பாகும். தமிழர் சமூகத்தின் வாழ்வாதார மேம்பாடு, பொருளாதார முன்னேற்றம், கல்விவளர்ச்சி மற்றும் மருத்துவ தன்னிறைவை உருவாக்குவது எங்கள் முக்கிய நோக்கங்களாகும்.

பெண்களின் பாதுகாப்பு, சமஉரிமை மற்றும் சமூகத்தில் அவர்களின் மரியாதை நிலை உயரவேண்டும் என்பதில் அமைப்பு உறுதியுடன் செயல்படுகிறது. இளைஞர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களை நல்வழிப்படுத்தி, சமூக பொறுப்புணர்வுடன் வளர்க்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில் அரசியல் விழிப்புணர்வு, ஜனநாயக பொறுப்பு மற்றும் நல்லாட்சி குறித்த தெளிவை மக்களிடையே ஏற்படுத்தும் பணிகளையும் முன்னெடுக்கிறது.

மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்டு நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படும் சமூக அமைப்பாக திகழ்வதே எங்கள் அடிப்படை கொள்கையாகும். தமிழர் வளர்ச்சி பேரவை 2016 ஆம் ஆண்டு ஒரு சேவை அறக்கட்டளையாகத் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட நாளிலிருந்து கல்வி உதவிகள், மருத்துவ முகாம்கள், பெண்கள் நலதிட்டங்கள், இளைஞர் மேம்பாட்டு நிகழ்ச்சிகள், முதியோர் ஆதரவு மையங்கள் மற்றும் சமூகசேவைகள் போன்ற பல்வேறு பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

சமூகத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. தமிழர்பண்பாடு, மொழி, மரபு மற்றும் ஆன்மீக மதிப்புகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடனும் அமைப்பு செயல்படுகிறது. சமூக ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தை வலுப்படுத்துவது எங்கள் முக்கிய பணி ஆகும். மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதில் அமைப்பு உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளது.

ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பான, வளமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதே எங்கள் கனவாகும். மக்கள் சக்தியே சமூகமாற்றத்தின் அடித்தளம் என்ற நம்பிக்கையுடன் ஒருமித்த கருத்துடைய நபர்களை இணைத்து செயல்பட்டு வருகிறோம். சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு இயக்கங்களையும் மேற்கொள்கிறோம்.

அனைத்து தமிழர் வளர்ச்சி பேரவை

எங்கள் சேவைகள்


அரசியல் பழகு

கல்விச்சேவை

மகளிர் மேம்பாடு

இளைஞர் சக்தி

விவசாயம் காப்போம்

மூத்தோர் நலவாழ்வு

மருத்துவம் & சட்டப் பாதுகாப்பு

இலக்கியம் & முற்போக்கு சிந்தனை ஊக்குவிப்பு

111111
எங்கள் இலக்கு (Mission)

மக்களோடு மக்களாக நின்று களப்பணியாற்றி அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்திட சேவைப்பகிர்வும், சமுதாய விழிப்புணர்வு, சட்டபாதுகாப்பு, சுதந்திரமான தன்னிறைவு வாழ்க்கைக்கு வழிகாட்டுதலும்.

எங்கள் தொலைநோக்கு (Vision)

தமிழர் நலன், சமூக அக்கறையுடன் மக்கள் பிரதிநிதியாக மக்களுடன் இணைந்து அவர்களுக்கான அரசியலறிவு, அரசியல் தெளிவை ஏற்படுத்தி மக்கள் சேவையே மகேசன் சேவை எனும் நிலையை அடைதல்.

மக்கள் சேவையே நிறை வாழ்வு! நிறை வாழ்வே இறைவாழ்வு!!

காணொளித் தொகுப்பு

தமிழர் வளர்ச்சி பேரவையின் சமூக சேவைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் நல பயணத்தின் சிறப்பான காணொளிகளை காண வரவேற்கிறோம்.

மேலாண்மை

தமிழர் வளர்ச்சி பேரவையின் சமூக முன்னேற்றப் பயணத்தில் அர்ப்பணிப்புடன் செயல்படும் எங்கள் திறமையான மற்றும் மனிதநேயமிக்க குழு உறுப்பினர்களை அறிந்து கொள்ளுங்கள்.


திருமதி ராமஜெயம் கருணாகர பாண்டியன்
மாநில தலைவர்

Rtn.சி.அண்ணாதுரை DEEE
மாநில பொதுச் செயலாளர்

மது‌சூதனன் பாலகுமார்
மாநில பொருளாளர்

எம். ஞானசேகர்
தொழில் ஆலோசகர் மற்றும் பத்திரிகையாளர்

M P ராம்மதன்
சட்ட ஆலோசகர்

S.சீனிவாசன்
கொள்கை பரப்பு செயலாளர்

B.S.T. ரகுராமன், ME.
மாநில இளைஞரணி செயலாளர்

C. ராஜேஷ்
மாநில துணை பொதுச் செயலாளர்
சேவைகள்